Friday, August 08, 2008

452. அந்தோணிக்கு சக்கர நாற்காலி கிடைத்து விட்டது!

எனது இந்தப் பதிவில் இட்ட வேண்டுகோளின் தொடர்ச்சியாக நமது தமிழிணைய நல்ல உள்ளங்களின் ஆதரவோடு திரட்டிய தொகையைக் கொண்டு வாங்கிய (பாட்டரியால் இயங்கும்) சக்கர நாற்காலி நேற்று நண்பர் அந்தோணியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த தானியங்கி சக்கர நாற்காலியின் வாயிலாக அவரால் தானாகவே வெளியிடங்களுக்குச் சென்று வர இயலும். ஒரு முறை பாட்டரியை சார்ஜ் செய்தால், 7 கி.மீ வரை பிரயாணிக்க இயலும். அந்தோணிக்கு சக்கர நாற்காலி கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி என்பது அவர் என்னிடம் தொலைபேசியதிலிருந்தே தெரிந்தது!

இந்த சமயத்தில் பொருளுதவி செய்த அன்பு நண்பர்களுக்கும், அந்தோணியை வாழ்த்திய அன்பர்களுக்கும் என் நன்றியைத் தெரிவிக்கிறேன்.

இதற்கு முன்னால், அந்தோணிக்கு நமது கூட்டு முயற்சியின் வாயிலாக ஒரு மடிக்கணினி வாங்கித் தரப்பட்டது. அது தொடர்பான எனது பதிவையும் வாசிக்கவும். இதன் வாயிலாக, அந்தோணி வீட்டிலிருந்தபடியே கணினி சார்ந்த பணி ஒன்றை மேற்கொண்டு (working from home) தன் தேவைகளுக்கு வேண்டிய பணத்தை சம்பாதிக்க முடிகிறது.

உங்கள் பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும் அந்தோணி மென்மேலும் வளர்வதற்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கும் !

அந்தோணியின் தமிழ் வலையகம் இது

என்றென்றும் அன்புடன்
பாலா

25 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test comment !

said...

Concentrate to the things that could give information to the people.

Sridhar V said...

பாலா,

நல்லதொரு முயற்சி. இது போன்ற உங்கள் முயற்சிகள் தொடரட்டும். வாழ்த்துகள் :-)

ஜோசப் பால்ராஜ் said...

வாழ்த்த வார்த்தைகள் இல்லை.
ஏற்கனவே உதவிகள் தேவைக்கு அதிகமாக குவிந்துவிட்டதால், எங்களால் இப் பணியில் பங்கு பெற இயலவில்லை. உதவிய அத்தனை பேருக்கும் நன்றி கூறிகொள்கிறேன்.

பாலா அண்ணா, உங்கள் பணி மிகப் பாராட்டத்தக்கது. உங்கள் அலைபேசி எண்ணை எனக்கு மின்மடலில் அனுப்புங்கள். எனது மின்னஞ்சல் முகவரி: joseph.paulraj@gmail.com

புதுகை.அப்துல்லா said...

அந்தோணியை சக்கர நாற்காலியுடன் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. நீங்கல் எடுத்த இந்த முயற்சிக்கு இறைவனின் அருள் என்றும் உங்களுக்கு கிட்டட்டும்.

said...

மேலே வாழ்த்து கூறிய மூவரில் ஒருவர் இந்து ஒருவர் கிறித்துவர் ஒருவர் இஸ்லாமியர்... மனிதநேயம் வாழ்க :)

வடுவூர் குமார் said...

படிக்க சந்தோஷமாக இருக்கு.
நன்றி.

dondu(#11168674346665545885) said...

மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ramachandranusha(உஷா) said...

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் பாலா. இன்னும் அந்தோணிக்கு நாற்காலி வாங்கி தர முடியவில்லலயே என்ற கேள்வி மனதைக் குடைந்துக் கொண்டிருந்தது. அனைவருக்கும் நன்றி.

சின்னப் பையன் said...

மிக நல்ல முயற்சி... நான் அந்த பதிவைப் பார்க்காததால், இந்த பணியில் பங்கேற்க முடியவில்லை.
பாலா, உங்களுக்கு வாழ்த்துக்கள்...

Aruna said...

நல்ல மனங்கள் வாழ்க....மேலும் தொடர்க உங்கள் சேவை.

அந்தோணிமுத்து சுதந்திரக் காற்றை சுவாசிக்க வழி வகுத்த அனைவருக்கும் நன்றிகள்.
அன்புடன் அருணா

Boston Bala said...

வாழ்த்துகள்!

மதுமிதா said...

பாலா வாழ்த்துகள். நன்றி.
வேறு வார்த்தைகள் கிடைக்கவில்லை.

R.DEVARAJAN said...

Well done Sir!!
U may start a centre for Home based online jobs also.
Many students, house wives & job seekers 'll be benefitted.
They r cheated by Spams very often.
Regards,
Dev

நானானி said...

அந்தோணிக்கு ஓர் ஆதாரம் கிடைத்தது பற்றி மிக்க மகிழ்ச்சி!!!
இனி அவர் தம் விரல்கள் கொண்டு
உலகை வெல்ல வாழ்த்துகிறேன்!!

ச.சங்கர் said...

வாழ்த்துக்கள் & Well Done பாலா

அன்பு said...

வாழ்த்துக்கள் பாலா. உங்கள் எல்லா முன்னெடுப்புக்கும் தொடர் முயற்சிக்கும் மீண்டும் மிக்க நன்றி...

enRenRum-anbudan.BALA said...

நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

நீங்கள் தரும் ஊக்கமும், ஆதரவுமே இது போன்ற சமூக உதவிகளை முன்னெடுத்துச் செல்வதற்கு காரணம்.

எ.அ.பாலா

ரவி said...

"நல்ல மனம் வாழ்க" என்று ஏதோ ஒரு பழைய பாடலை முனுமுனுக்க தோன்றுகிறது...!!!

? said...

காலத்தி னாற்செய்த நன்றி
- சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

வாழ்த்த வார்த்தைகள் இல்லை. அதனால் வான்புகழ் வள்ளுவனை துணைக்கழைத்தேன்!

கோவி.கண்ணன் said...

நண்பர்களின் கூட்டு முயற்சிக்கும், அதில் நீங்கள் காட்டிய ஈடுபாடும் போற்றத்தக்கது.

நல்லதோர் பேருதவி !

பாராட்டுக்கள் பாலா !

said...

இந்த பதிவுக்குக் கூட சில ... பிறவிகள் '-' குத்தியிருக்கின்றன ... அவற்றையும் கடவுள் காப்பாற்றட்டும்

said...
This comment has been removed by a blog administrator.
enRenRum-anbudan.BALA said...

செந்தழல் ரவி, நந்தவனத்தான், கோவி.கண்ணன், தமிழ் நெஞ்சம்,
வாசிப்புக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.
எ.அ.பாலா

said...

அருமையான செயல்.ஆண்டவன் மனம் குளிரும் ஒன்றை செய்துள்ளீர்கள். நன்றிகள்!

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails